ஆப்நகரம்

ரெப்போ வட்டியை உயர்த்திய ரிசர்வ் வங்கி.. இனி எல்லாமே உயரப் போகுது!

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று அஞ்சப்படுகிறது.

Samayam Tamil 5 Aug 2022, 11:29 am
மத்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வாயிலாக வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதம் 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு ரெப்போ வட்டி 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பணவீக்கம் தற்போது கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியிருக்கிறது.
Samayam Tamil repo rate


ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் பொதுமக்களுக்கு அதிக சுமை ஏற்பட உள்ளது. ஏனெனில், ரெப்போ வட்டி உயர்வின் தாக்கம் மற்ற அனைத்து வங்கிக் கடன்கள் மீதும் இருக்கும். அதாவது வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிக சுமை ஏற்படும். எனினும் ஃபிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களில் பணம் போட்டவர்களுக்கு சலுகை கிடைக்கலாம்.

இன்றைய நாணயக் கொள்கைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய ரிசர்ச் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), பணவீக்கம் ஆகியவற்றின் மதிப்பீடுகளையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 16.2 சதவீதமாகவும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6.2 சதவீதமாகவும், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 4.1 சதவீதமாகவும், ஜனவரி - மார்ச் காலாண்டில் 4 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டம் தொடங்கியது.. வட்டி விகிதம் உயருமா? என்ன எதிர்பார்க்கலாம்?
பணவீக்கத்தைப் பொறுத்தவரையில், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 7.1 சதவீதமாகவும், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 6.4 சதவீதமாகவும், ஜனவரி - மார்ச் காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்