ஆப்நகரம்

ரெப்போ வட்டி மேலும் உயர்வு.. ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு!

ரெப்போ வட்டி விகிதம் 0.50% உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Sep 2022, 12:01 pm
பணவீக்கம் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில், கடந்த இரு தினங்களாக ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கொள்கை கூட்டத்தின் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் இன்று காலையில் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil Shaktikanta Das


அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 0.50% உயர்த்தப்பட்டு 5.9% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல SDF விகிதம் 5.65% ஆகவும், MSF விகிதம் 6.15% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சில்லறை பணவீக்கம் 7% ஆக இருந்தது. நடப்பு ஆண்டின் இரண்டாம் அரையாண்டிலும் பணவீக்கம் உயர்வாகவே இருக்கும் என சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “சர்வதேச சந்தையில் அண்மையில் பொருட்களின் விலை குறைந்தது தொடர்ந்து நீடித்தால் வரும் மாதங்களில் விலைவாசி கட்டுக்குள் இருக்கும்.

தீபாவளிக்கு 30% தள்ளுபடியில் ஜவுளி எடுக்கலாம்! உடனே முந்துங்கள்!
தற்போது பணவீக்கம் சுமார் 7% ஆக உள்ளது. இரண்டாம் அரையாண்டில் 6% விகிதத்தில் பணவீக்கம் தொடர்ந்து உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 7.2%இல் இருந்து 7% ஆக குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.

நடப்பு நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 6.7% ஆக இருக்கலாம் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் பணக் கொள்கை கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில் உலகப் பொருளாதாரம் புதிய புயலின் கண்ணில் சிக்கியுள்ளதாகவும் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.

இதில் சுவாரஸ்ய விஷயம் என்னவெனில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையிலும் பங்குச் சந்தை பாசிட்டிவாகவே உள்ளது. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் நிப்டி 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்