ஆப்நகரம்

கனரா வங்கிக்கு ரூ.2.92 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி.. வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?

கனரா வங்கிக்கு 2.92 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு. இதனால் கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தா?

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 14 May 2023, 8:12 pm
பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக கனரா வங்கிக்கு (Canara Bank) 2.92 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil canara bank
canara bank


விதிமுறைகளை மீறும் வங்கிகள் குறித்து விசாரணை நடத்தி அபராதம் விதித்து வருகிறது ரிசர்வ் வங்கி. இதன்படி அண்மையில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கியான கனரா வங்கி விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கனரா வங்கிக்கு 2.92 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கனரா வங்கியின் செயல்பாடுகள் குறித்து 2021 மார்ச் 31ஆம் தேதி ரிசர்வ் வங்கி விரிவான விசாரணை நடத்தியது. மற்றொரு வங்கி கொடுத்த புகாரின் பேரில் இந்த விசாரணையை ரிசர்வ் வங்கி தொடங்கியது. இந்த விசாரணையில், விதிமுறைகள், வழிகாட்டல்களை மீறி கனரா வங்கி செயல்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது.

குறிப்பாக கனரா வங்கி ரெப்போ வட்டியுடன் தனது வட்டி விகிதங்களை இணைக்காமலேயே இருந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், தகுதியில்லாத நபர்களுக்கு சேமிப்பு கணக்குகளை கனரா வங்கி தொடங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் பல்வேறு கிரெடிட் கார்டு கணக்குகள் போலி மொபைல் எண்களை கொடுத்து தொடங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுபோக தின டெபாசிட் திட்டத்துக்கு வட்டி செலுத்த தவறியது, MMS கட்டணங்கள் வசூலித்தது போன்ற விதிமீறல்களிலும் கனரா வங்கி ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கனரா வங்கியிடம் விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது. கனரா வங்கி அளித்த பதில்களை ஆய்வு செய்தபின் கனரா வங்கிக்கு 2.92 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்த அபராத தொகை என்பது கனரா வங்கியின் விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்டதே தவிர இதனால் கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கும், அவர்களின் பரிவர்த்தனைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்