ஆப்நகரம்

திருச்செங்கோடு நகர கூட்டுறவு வங்கிக்கு அபராதம்.. ரிசர்வ் பேங்க் உத்தரவு!

திருச்செங்கோடு நகர கூட்டுறவு வங்கிக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 28 Jun 2022, 2:38 pm
தமிழகத்தை சேர்ந்த திருச்செங்கோடு நகர கூட்டுறவு வங்கிக்கு (Tiruchengode Co-operative Urban Bank) 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil RBI


ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள், ஒழுங்குமுறைகளுக்கு இணங்காததற்காக திருச்செங்கோடு நகர கூட்டுறவு வங்கிக்கு அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது

வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 பிரிவுகள் 47 A(1)(c), 46(4)(i), 56 ஆகியவற்றின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி திருச்செங்கோடு நகர கூட்டுறவு வங்கிக்கு அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஓய்வூதியம் உயர்வு முதல் விடுமுறை வரை.. தமிழ்நாடு அரசுக்கு கூட்டுறவு சங்க பணியாளர்கள் கோரிக்கை!
விதிமுறைகளுக்கு இணங்காததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதே தவிர வங்கிக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான பரிவர்த்தனைகள் அல்லது ஒப்பந்தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

2020 மார்ச் நிலவரப்படி திருச்செங்கோடு நகர கூட்டுறவு வங்கியின் நிதிநிலை அறிக்கையை ஆய்வு செய்தபோது அதில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதை ரிசர்வ் வங்கி கண்டறிந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டு திருச்செங்கோடு நகர கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது.

திருச்செங்கோடு நகர கூட்டுறவு வங்கியின் விளக்கம், நேரடி விசாரணையில் தெரிவிக்கப்பட்ட பதில்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக ரிசர்வ் வங்கி முடிவுக்கு வந்தது. இதையடுத்து திருச்செங்கோடு நகர கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கி 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்