ஆப்நகரம்

HDFC நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்.. ரிசர்வ் வங்கி உத்தரவு.. வாடிக்கையாளர்களுக்கு ஆபத்தா?

எச்டிஎஃப்சி நிறுவனத்துக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 18 Mar 2023, 3:05 pm
வீடமைப்பு நிதி நிறுவனமான எச்டிஎஃப்சி (HDFC) நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி (RBI) 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil hdfc - rbi
hdfc - rbi


முன்னணி வீடமைப்பு நிதி நிறுவனமான எச்டிஎஃப்சி (HDFC) வீட்டுக் கடன் வழங்குவதை பிரதான தொழிலாக செய்து வருகிறது. இந்நிலையில், விதிமுறைகளுக்கு இணங்காமல் செயல்பட்டதற்காக எச்டிஎஃப்சி நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.

2020 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி எச்டிஎஃப்சி நிறுவனத்தின் நிதி நிலை குறித்து தேசிய வீடமைப்பு வங்கி (NHB) ஆய்வு செய்தது. இந்த ஆய்வறிக்கை அடிப்படையில், எச்டிஎஃப்சி நிறுவனம் சில விதிமுறைகளுக்கு இணங்காமல் செயல்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய வீடமைப்பு வங்கியின் உத்தரவுகளுக்கு இணங்காமல் எச்டிஎஃப்சி நிறுவனம் செயல்பட்டுள்ளது தெரியவந்ததை தொடர்ந்து, இதற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு எச்டிஎஃப்சி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீஸுக்கு எச்டிஎஃப்சி நிறுவனம் அளித்த பதில்களை தீர ஆய்வு செய்தபின், விதிமுறைகளுக்கு எச்டிஎஃப்சி நிறுவனம் இணங்காமல் செயல்பட்டுள்ளது என்ற முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்துள்ளது. இதையடுத்து, எச்டிஎஃப்சி வங்கிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தேசிய விடமைப்பு வங்கி சட்டம் 1987 கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் எச்டிஎஃப்சி நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

எச்டிஎஃப்சி நிறுவனம் விதிமுறைகளுக்கு இணங்காததற்கு மட்டுமே 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அபராதத்தால் எச்டிஎஃப்சி நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான பரிவர்த்தனைகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்