ஆப்நகரம்

வங்கியில் பணம் எடுக்க தடை.. ரிசர்வ் பேங்க் உத்தரவு!

இந்த வங்கியில் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி தடை.

Samayam Tamil 15 May 2022, 9:49 am
வங்கியில் பணம் எடுக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்தத் தடை ஆறு மாதங்களுக்கு அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.
Samayam Tamil rbi imposes restrictions on shankarrao pujari nutan nagari sahakari bank limited for six months
வங்கியில் பணம் எடுக்க தடை.. ரிசர்வ் பேங்க் உத்தரவு!


​வங்கிகளுக்கு தடை

நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகள், போதிய மூலதனமும், வருமானம் ஈட்டுவதற்கு வழியும் இல்லாத வங்கிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளையும், தடையையும் அமல்படுத்தி வருகிறது.

​காரணம்

சங்கர்ராவ் புஜாரி நுதன் நகாரி சஹாகரி வங்கியின் நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதால் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

​இந்த வங்கிக்கு தடை

இந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் உள்ள சங்கர்ராவ் புஜாரி நுதன் நகாரி சஹாகரி வங்கி மீதும் ரிசர்வ் வங்கி பல்வேறு தடைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அடுத்த ஆறு மாதங்களுக்கு அமல்படுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

​பணம் எடுக்க தடை

இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு அல்லது எந்தவொரு கணக்கில் இருந்தும் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

​கடனுக்கு அனுமதி

நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வங்கியில் இருக்கும் டெபாசிட்டை வைத்து கடன் வழங்குவதற்கு மட்டும் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

​மற்ற தடைகள்

இந்த வங்கி ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி புதிய கடன்களை வழங்கவும், கடன்களை புதுப்பிக்கவும், முதலீடு செய்யவும், சொத்துகளை விற்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்