ஆப்நகரம்

பணத்தை சும்மா வைத்திருக்க கூடாது.. இந்தியர்களுக்கு ரிசர்வ் வங்கி தடை!

இந்தியர்கள் வெளிநாட்டுகளில் வெளிநாட்டு நாணயங்களை சும்மா வைத்திருக்க ரிசர்வ் வங்கி தடை.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 15 Mar 2023, 3:47 pm
இந்தியாவில் இருந்து அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு நாணயங்களை வெளிநாட்டுக்கு அனுப்பியோருக்கான விதிமுறையை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது. இதன்படி, வெளிநாடுகளில் டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை சும்மா வைத்திருக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
Samayam Tamil cash
cash


ரிசர்வ் வங்கியின் LRS (Liberalised Remittance Scheme) திட்டத்தின் கீழ் இந்தியர்கள் வெளிநாட்டுக்கு அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு நாணயங்களை அனுப்ப முடியும். இந்த தொகையை வைத்து வெளிநாட்டு பங்குச் சந்தைகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்ட சொத்துகளில் முதலீடும் செய்யலாம்.

இதற்கு சட்ட ரீதியாகவே ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. இந்நிலையில், வெளிநாட்டுக்கு அனுப்பிய அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை முதலீடு செய்யாமல் சும்மாவே வைத்திருப்பதற்கு தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

இதன்படி, வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட டாலர் உள்ளிட்ட நாணயங்களை முதலீடு செய்யாமல் சும்மா வைத்திருக்கக்கூடாது. அப்படி சும்மா இருக்கும் நாணயங்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவந்து 180 நாட்களுக்குள் அங்கீகரிப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, வெளிநாடுகளில் இருக்கும் உங்களின் டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை பங்குகள், பத்திரங்கள் போன்ற சொத்துகளில் முதலீடு செய்யாமல் சும்மா இருந்தால் அதை இந்தியாவுக்கு உடனடியாக கொண்டுவர வேண்டும். இந்தியாவுக்கு கொண்டுவந்து 180 நாட்களில் அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

வெளிநாடுகளில் பயன்படுத்தப்படாமலும், செலவிடப்படாமலும் இருக்கும் டாலர் உள்ளிட்ட நாணயங்களை இவ்வகையில் ஒப்படைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதேபோல வெளிநாடுகளில் முதலீடு செய்த சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தையும் முதலீடு செய்துவிட வேண்டும். அப்படி முதலீடு செய்யாமலும், செலவு செய்யாமலும் இருந்தால் இந்தியாவுக்கு கொண்டு வந்து 180 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்