ஆப்நகரம்

இதற்கெல்லாம் வங்கிக் கிளைக்கே போக வேண்டாம்.. ரிசர்வ் வங்கி புது ரூல்ஸ்!

KYC அப்டேட் செய்ய வங்கிக் கிளைக்கு போக தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 6 Jan 2023, 5:13 pm
வங்கி கணக்குதாரர்கள் அனைவரும் தங்களது கணக்கிற்கு KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிதல்) முடிக்க வேண்டும். இந்நிலையில், KYC முடிப்பதற்கான விதிமுறைகளை திருத்தியுள்ளது. இதன்படி, வங்கிக் கணக்குதாரர்கள் இனி KYC விவரங்களை அப்டேட் செய்வதற்கு வங்கி கிளைகளுக்கு செல்ல தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Samayam Tamil KYC
KYC


அதாவது, கணக்குதாரர் ஏற்கெனவே உரிய ஆவணங்களை சமர்ப்பித்திருந்து, வீட்டு முகவரியில் எந்த மாற்றமும் இல்லை என்றால் அவர் தனது வங்கிக் கணக்கிற்கான KYC அப்டேட் செய்வதற்கு வங்கி கிளைக்கு நேராக செல்ல தேவை இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்வதற்கு பதிலாக, கணக்குதாரர்கள் இமெயில், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ஏடிஎம் மற்றும் ஆன்லைன் வழியாக சுய அறிவிக்கை (Self Declaration) ஒன்றை சமர்ப்பித்தால் பொதும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பெண்கள் வேலைசெய்ய சிறந்த நகரம்.. இந்தியாவிலேயே சென்னை முதலிடம்.. பட்டையை கிளப்பும் தமிழ்நாட்டு நகரங்கள்!
KYC அப்டேட் செய்வதற்காக வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்கு வர வேண்டும் என வங்கிகள் அழைக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது இதுகுறித்த வழிகாட்டலை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டலில், KYC விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை எனில், KYC அப்டேட் செய்வதற்கு வாடிக்கையாளர் சுய அறிவிக்கை சமர்ப்பித்தாலே போதுமானது என்று தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான வசதிகளையும் வங்கிகள் செய்துதர வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

அதாவது, வாடிக்கையாளர்கள் KYC அப்டேட் செய்வதற்கு வங்கிக் கிளைக்கு வராமலேயே சுய அறிவிக்கையை இமெயில், மொபைல் எண், ஏடிஎம், நெட் பேங்கிங் வழியாக சமர்ப்பிப்பதற்கு தேவையான வசதிகளை வங்கிகள் செய்துதர வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வங்கி கணக்குதாரரின் முகவரியில் ஏதேனும் மாற்றம் இருந்தால், வாடிக்கையாளர் KYC அப்டேட் செய்வதற்கு தனது புதிய முகவரிக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை வங்கிகள் இரண்டு மாதங்களுக்குள் சரிபார்க்க வேண்டும்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்