ஆப்நகரம்

இந்த வங்கிகளில்தான் மோசடி அதிகம்.. ரிசர்வ் பேங்க் தகவல்!

பஞ்சாப் நேஷனல் வங்கி, எஸ்பிஐ ஆகிய வங்கிகளில் அதிகபட்சமான மோசடிகள் நடப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Samayam Tamil 17 May 2022, 3:34 pm
இந்தியாவில் மிகப்பெரிய வங்கி மோசடிகள் பஞ்சாப் நேஷனல் வங்கி, எஸ்பிஐ ஆகிய இரண்டு பொதுத்துறை வங்கிகளில் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil rbi


2021-22 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளில் நடக்கும் மோசடிகளின் விகிதம் 51 விழுக்காடு சரிந்து 40,295.25 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளில் 81,921.54 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவிற்கு அளித்த பதிலில் ரிசர்வ் வங்கி இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் நடக்கும் மோசடி தொகை குறைந்தாலும், மோசடிகளின் எண்ணிக்கை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி வெப்சைட்டில் பிரச்சினை - இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு உத்தரவு!
2021-22ஆம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளில் நடந்த மோசடிகளின் எண்ணிக்கை 7,940 ஆக இருந்துள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளில் நடந்த மோசடிகளின் எண்ணிக்கை 9,933 ஆக இருந்தது என ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளிலேயே பஞ்சாப் நேஷனல் வங்கியில்தான் அதிகபட்சமாக 9,528.95 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அடுத்தபடியாக இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியில் 6,932.37 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ பேங்க், பஞ்சாப் & சிந்த் வங்கி ஆகிய வங்கிகள் உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்