ஆப்நகரம்

‘’ரகுராம் ராஜனின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர வேண்டும்’’

ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைந்தாலும், அவர் செயல்படுத்திய பணவீக்கம் தொடர்பான சீர்திருத்தப் பணிகளை ரிசர்வ் வங்கி தொடர வேண்டும் என எதிர்பார்ப்பதாக, மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் தெரிவித்துள்ளது.

TNN 15 Aug 2016, 6:51 pm
ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைந்தாலும், அவர் செயல்படுத்திய பணவீக்கம் தொடர்பான சீர்திருத்தப் பணிகளை ரிசர்வ் வங்கி தொடர வேண்டும் என எதிர்பார்ப்பதாக, மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rbi should continue with rajans policies on inflationmoodys
‘’ரகுராம் ராஜனின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர வேண்டும்’’


ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநராக உள்ள ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் 4ம் தேதியுடன் முடிவடைகிறது. இவர் மீண்டும் பதவியில் தொடர விருப்பம் இல்லை எனக் கூறிவிட்டார். இதையடுத்து, புதிய ஆளுநரை தேர்வு செய்யும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

தனது பதவிக்காலத்தின் இறுதி நிதிக்கொள்கை அறிக்கையை கடந்த வாரம் ரகுராம் ராஜன் வெளியிட்டார். அதில், வட்டிவிகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், முழு அர்ப்பணிப்புடன் ஆளுநர் பணியை செய்தேன் என்றும் அவர் கூறியிருந்தார். இன்னும் சில நாட்கள் அவகாசம் கிடைத்தால், சில பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க முடியும் எனவும் ரகுராம் ராஜன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அவரது செயல்பாடுகள் பற்றி மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரகுராம் ராஜனின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகள் சிறப்பான பலனை அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அவர் மேலும் சில ஆண்டுகள், இந்திய ரிசர்வ் வங்கிப் பணியில் நீடித்தால், நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்றும் மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ரகுராம் ராஜன் பதவியில் நீடிக்காத நிலையிலும், அவர் செயல்படுத்திய சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்ய வேண்டும் என்றும், மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் சுட்டிக்காட்டி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்