ஆப்நகரம்

ஆன்லைன் கடன் ஆப்களுக்கு ஆப்பு.. ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு!

டிஜிட்டல் கடன் ஆப்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

Samayam Tamil 11 Aug 2022, 1:49 pm
டிஜிட்டல் கடன் ஆப்களின் இம்சை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. மிக அதிக வட்டிக்கு கடன் கொடுப்பது, கடனை வசூலிக்க கடன் வாங்கியவர்களை மிக மோசமாக நடத்துவது போன்ற புகார்கள் டிஜிட்டல் கடன் ஆப்கள் மீது பொதுமக்களிடையே எழுந்துள்ளன.
Samayam Tamil RBI


டிஜிட்டல் கடன் ஆப்களால் தற்கொலை செய்துகொண்டவர்களும் இருக்கின்றனர். எனவே, டிஜிட்டல் கடன் ஆப்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டிஜிட்டல் கடன் ஆப்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதில், கடன்களுக்கு மிக அதிக வட்டி வசூலிக்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், கடனை திருப்பி வசூலிக்க டிஜிட்டல் கடன் நிறுவனங்களின் முறையில்லாத செயல்களை தடுக்கவும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

1800 ஊழியர்களுக்கு வேலை காலி.. மைக்ரோசாஃப்ட் செயலால் அதிர்ச்சி!
புதிய விதிமுறைகளின்படி, டிஜிட்டல் கடன் ஆப்கள் கடன் வழங்கும்போது, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் வழியாக கடன் வாங்குபவரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட வேண்டும். வேறு எந்தவொரு கணக்கில் இருந்தும் கடன் வழங்கப்படக்கூடாது.

அதேபோல கடன் சார்ந்த கட்டணங்களும் வங்கிக் கணக்கு வழியே செலுத்தப்பட வேண்டும். மேலும் மிக அதிக வட்டி விதிப்பது, கடனை திருப்பி வசூலிக்க தகாத முறைகளை பயன்படுத்துவது, தகவல் பாதுகாப்பை மீறுவது, தவறான விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்