ஆப்நகரம்

நிடா அம்பானியின் புதிய அவதாரம்.. பெண்களுக்கு சூப்பர் வசதி!

பெண்களுக்கான புதிய ஆப் அறிமுகப்படுத்திய நிடா அம்பானி.

Samayam Tamil 11 Mar 2022, 1:23 pm
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவியும், ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவருமான நிடா அம்பானி பெண்களின் வளர்ச்சிக்கு உதவும் புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil nita ambani


‘ஹெர் சர்கிள்’ (Her Circle) எனப்படும் இந்த ஆப் கடந்த மகளிர் தினத்தன்று இந்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆப் ஏற்கெனவே கடந்த ஆண்டில் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹெர் சர்கிள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான ஆப் எனவும், 4.2 கோடி பெண்களை சென்றடைந்துள்ளதாகவும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

இந்த ஹெர் சர்கிள் ஆப் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. பெண்கள் தங்களுக்கான வாய்ப்புகளை தேடிக்கொள்ளவும், சரியான வேலைவாய்ப்பு அல்லது தொழிலை தேர்ந்தெடுக்கவும் உந்த ஆப் உதவுவதாக கூறப்படுகிறது.

20 லட்சம் சும்மா கிடைக்கும்.. அரசு வங்கியில் இப்படியொரு சலுகையா?
சுய தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கும் இந்த ஆப் உதவுகிறது. மேக் அப் ஆர்டிஸ்ட், சமையல், ஃபிட்னஸ், ரேடியோ ஜாக்கி என பெண்கள் பெரும்பாலும் தொடங்கும் சுய தொழில் சார்ந்த பயிற்சிகள் இந்த ஹெர் சர்கிள் ஆப் மூலம் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சிகளுக்கு பெருமளவில் வரவேற்பும் கிடைத்துள்ளதாக ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் கூறுகிறது.

இதுபோக ஃபிட்னஸ், ஊட்டச்சத்து, கர்ப்பகாலம், நிதி சார்ந்த விஷயங்களையும் லட்சக்கணக்கான பெண்கள் இலவசமாக தெரிந்துகொள்வதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆப் கணினி, மொபைல் இரண்டிலுமே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹெர் சர்கிள் தளத்தில் 30,000 பெண் தொழில் முனைவோர் பதிவு செய்துகொண்டுள்ளனர். மேலும் ஏராளமான பெண்களை இணைத்து மகளர் வளர்ச்சியை நோக்கி நகருவதாக நிடா அம்பானி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்