ஆப்நகரம்

காங்கிரஸ் கட்சியிடம் கை ஏந்தும் ரிலையன்ஸ்!

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வியின் அவதாறு பேச்சுக்கு ரூ.5,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு அனில் அம்பானி குரூப் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது.

TNN 1 Dec 2017, 8:29 pm
காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வியின் அவதாறு பேச்சுக்கு ரூ.5,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு அனில் அம்பானி குரூப் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது.
Samayam Tamil reliance group to file 5000 crore defamation suit against abhishek singhvi
காங்கிரஸ் கட்சியிடம் கை ஏந்தும் ரிலையன்ஸ்!


மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடன் தள்ளுபடி என்ன பெயரில் மக்களை முட்டாளாக்கிவிட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி குற்றம்சாட்டினார்.

1.88 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தொகையை மோசடி செய்தவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். "இந்தியாவில் முன்னணியில் உள்ள 50 நிறுவனங்கள் 8.35 லட்சம் கோடி ரூபாயை வங்கியில் பெற்றுள்ளன.



அவற்றில் ரிலையன்ஸ், அதானி மற்றும் இஸ்ஸார் ஆகியவை குஜராத்தைச் சேர்ந்தவை. இவற்றில் ஒரு நிறுவனம் அண்மையில் 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை மூடிவிட்டது." என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து, ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள பேட்டியில், "அபிஷேக் சிங்வியின் அவதூறு கருத்துக்கு எதிராக ரூ.5,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்