ஆப்நகரம்

டாடாவுக்கு போட்டியாக ரிலையன்ஸ் எடுத்த ஆயுதம்.. இந்தியாவில் முதல் பிரெட் எ மாங்கர் ஸ்டோர்!

டாடா ஸ்டார்பக்ஸுக்கு போட்டியாக மும்பையில் பிரெட் எ மாங்கர் ஸ்டோரை திறந்துள்ளது ரிலையன்ஸ் குழுமம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 22 Apr 2023, 1:01 pm
டாடா குழுமம் இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் (Starbucks) காபி ஸ்டோர்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், டாடாவுக்கு போட்டியாக ரிலையன்ஸ் குழுமம் (Reliance) தற்போது இந்தியாவில் முதல் பிரெட் எ மாங்கர் (Pret a Manger) காபி ஸ்டோரை தொடங்கியுள்ளது.
Samayam Tamil Pret a Manger - Representative image
Pret a Manger - Representative image


அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமான காபி பிராண்ட். டாடா குழுமம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா ஸ்டார்பக்ஸ் (Tata Starbucks) என்ற பெயரில் இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் ஸ்டோர்களை நடத்தி வருகிறது.

தற்போது இந்தியாவில் 30 நகரங்களில் 275 டாடா ஸ்டார்பக்ஸ் ஸ்டோர்கள் இருக்கின்றன. 2021-22ஆம் நிதியாண்டில் மட்டும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இந்தியாவில் 50 புதிய ஸ்டோர்களை திறந்தது.

இந்நிலையில், டாடா ஸ்டார்பக்ஸுக்கு போட்டியாக ரிலையன்ஸ் குழுமம் இங்கிலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற காபி மற்றும் சாட்விச் நிறுவனமான பிரெட் எ மாங்கர் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன்படி நேற்று (ஏப்ரல் 21) மும்பையில் முதல் பிரெட் எ மாங்கர் ஸ்டோரை ரிலையன்ஸ் குழுமம் தொடங்கியுள்ளது.

முதல் ஆண்டிலேயே இந்தியாவில் 10 பிரெட் எ மாங்கர் ஸ்டோர்களை திறக்க ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது. தற்போது மும்பையில் 2567 சதுர அடி பரப்பளவில் மிகப்பெரிய பிரெட் எ மாங்கர் ஸ்டோரை ரிலையன்ஸ் நிறுவனம் திறந்துள்ளது.

ஆர்கானிக் காபி மற்றும் பல்வேறு உணவுகள் இந்த ஸ்டோரில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரிலையன்ஸ் மற்றும் பிரெட் எ மாங்கர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.

மும்பை பிரெட் எ மாங்கர் ஸ்டோரில் ஆர்கானிக் காபி, டீ, ஃப்ரெஷ் சாண்ட்விச், புகெட்ஸ் (baguettes), சாலட், சூப், ஷேக், ஸ்மூத்தி போன்ற உணவுகள் விற்பனைக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்