ஆப்நகரம்

Reliance JioMart Layoffs: 1000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ரிலையன்ஸ்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்துக்கு சொந்தமான ஜியோமார்ட் நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 23 May 2023, 12:52 pm
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோமார்ட் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil reliance jiomart layoffs
reliance jiomart layoffs


பொருளாதார அச்சங்கள் காரணமாக அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை அண்மையில் பணிநீக்கம் செய்துள்ளன. எனினும், இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தவிர முக்கிய பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு அறிவிப்பு வெளியிடவில்லை.

இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை சேர்ந்த ஜியோமார்ட் (JioMart) நிறுவனம் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ஜியோமார்ட் நிறுவனம் தனது கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள் 500 பேர் உள்பட மொத்தம் 1000 ஊழியர்களை ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் திடீரென இவ்வளவு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய காரணம் என்ன?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை சேர்ந்த ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் அண்மையில் மெட்ரோ கேஷ் அண்ட் கேரி (Metro Cash and Carry) நிறுவனத்தை 2850 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது. இதனால் மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தின் ஸ்டோர்கள் உள்ளிட்ட சொத்துகள் ரிலையன்ஸ் வசம் வந்துள்ளன.

இதுமட்டுமல்லாமல் மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தின் சுமார் 3500 நிரந்தர ஊழியர்களும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் வந்துவிட்டனர். இதனால் பணிகளில் சில குழப்பங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே சுமார் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்