ஆப்நகரம்

அடி வாங்கிய அம்பானி... கொரோனாவால் வந்த நஷ்டம்!

ஜனவரி - மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 39 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 1 May 2020, 3:13 pm
உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தனது காலாண்டு அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதன்படி, இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் அந்நிறுவனத்துக்கு 39 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்நிறுவனம் இவ்வளவு பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருப்பது இதுவே முதல் முறையாகும். கச்சா எண்ணெய் விலைச் சரிவு மற்றும் தேவை குறைவு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil mukesh ambani


ஜனவரி - மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட லாபம் ரூ.6,348 கோடியாக இருந்துள்ளது. அதாவது டாலர் மதிப்பீட்டில் 845 மில்லியன் டாலராகும். இக்காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் ரூ.10,520 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக இவ்வளவு பெரிய இழப்பை அந்நிறுவனம் சந்தித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாயில் ரூ.4,245 கோடி குறைந்துள்ளது.

ஒரு கார் கூட போணியாகவில்லை... கவலையில் கார் நிறுவனங்கள்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்ணெய் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் தொலைத் தொடர்புப் பிரிவில் நல்ல லாபம் கிடைத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சந்தாதார்களின் எண்ணிக்கை 38.75 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவில் 4 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது. எனினும், மார்ச் மாதத்தில் ஊரடங்கு காரணமாக விற்பனை முடங்கியதால் இதை விடக் கூடுதலான வருவாய் ஈட்ட முடியவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2.3 சதவீதம் உயர்ந்து ரூ.1.39 லட்சம் கோடியாக இருந்துள்ளது.

தங்கம் விலை: தங்கத்துக்கும் இன்று விடுமுறை!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் சுமையும் அதிகமாக இருப்பதால் பங்கு விற்பனை மூலமாக நிதி திரட்டும் நடவடிக்கையில், இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதோடு, ஊரடங்கு காரணமாக வருவாய் குறைந்துள்ளதால் அதன் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 21.4 பில்லியன் டாலர் வரையில் கடன் சுமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்