ஆப்நகரம்

நெட்வொர்க் சேவையில் ஜியோ ஆதிக்கம்!

ஆகஸ்ட் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் புதிதாக 84 லட்சம் பேர் இணைந்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 18 Oct 2019, 6:37 pm

ஹைலைட்ஸ்:

  • பிஎஸ்என்எல் நிறுவனம் 2 லட்சம் பேரை இழந்திருக்கிறது.
  • வோடஃபோன் - ஐடியா நெட்வொர்க்கின் மொத்த சந்தாதார் எண்ணிக்கை 37.5 கோடியாக உள்ளது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நெட்வொர்க் சேவையில் ஜியோ ஆதிக்கம்
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ஆகஸ்ட் மாதத்துக்கான நெட்வொர்க் சந்தாதார் குறித்த விவரங்களை இன்று (அக்டோபர் 18) வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 119.18 கோடிப் பேர் தொலைத் தொடர்பு சந்தாதார்களாக உள்ளனர். முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 118.92 கோடியாக இருந்தது.
யாரு என்ன சொன்னாலும் இந்தியா தான் டாப்: நிர்மலா சீதாராமன்

அதிகபட்சமாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் புதிதாக 84 லட்சம் பேரைத் தனது சேவையில் இணைத்துள்ளது. இது 2.49 சதவீத வளர்ச்சியாகும். தற்போது ஜியோவின் மொத்த சந்தாதார் எண்ணிக்கை 34.8 கோடியாக உள்ளது.

வேணும்னா பேரை மாத்திக்கோங்க... விமானத்தை விற்கப் புதுத் திட்டம்!

ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் சரிவைச் சந்தித்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் 5 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ள ஏர்டெல், தற்போது மொத்தம் 32.7 கோடி சந்தாதார்களை மட்டுமே கொண்டுள்ளது.

பெண்கள் இருந்தால்தான் இந்தியா வளரும்!

இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க் நிறுவனமான வோடஃபோன் - ஐடியா நெட்வொர்க்கின் மொத்த சந்தாதார் எண்ணிக்கை 37.5 கோடியாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்நிறுவனம் 49 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

அபிஜித் இடதுசாரி, அவரை மக்கள் நிராகரித்துவிட்டனர்: பியூஷ் கோயல்

அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் 2 லட்சம் பேரை இழந்திருக்கிறது. இந்நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறியுள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தம் 48.6 லட்சம் பேர் தங்களது நெட்வொர்க்கிலிருந்து வேறொரு நெட்வொர்க் சேவைக்கு மாறுவதற்கு விண்ணப்பித்ததாக டிராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்