ஆப்நகரம்

ஜியோ-வுக்கு எதிராக கைகோர்க்கும் பி.எஸ்.என்.எல் - வோடபோன்

ரிலையன்ஸ் நிறுவனம் அண்மையில் குறைந்த விலையிலான ஜியோ 4G சேவையை அறிவித்தது. போட்டியை சமாளிக்க சில நிறுவனங்கள் தற்போது கைகோர்த்துள்ளன.

TNN 13 Sep 2016, 7:21 pm
புதுடெல்லி : ரிலையன்ஸ் நிறுவனம் அண்மையில் குறைந்த விலையிலான ஜியோ 4G சேவையை அறிவித்தது. போட்டியை சமாளிக்க சில நிறுவனங்கள் தற்போது கைகோர்த்துள்ளன.
Samayam Tamil reliance jio impact vodafone bsnl join hands customers to benefit the most know how
ஜியோ-வுக்கு எதிராக கைகோர்க்கும் பி.எஸ்.என்.எல் - வோடபோன்


அண்மையில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ 4G சேவையை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு, தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் டேடா, விலையில்லா போன் அழைப்பு, ரோமிங் செலவு இல்லை என பல்வேறு திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் சந்தையில் உள்ள போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா,பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்கள் மிகவும் தொய்வை சந்தித்துள்ளது.

தங்களது வாடிக்கையாளர்களை இழக்காமல் இருப்பதற்காக தற்போது பி.எஸ்.என்.எல் - வோடபோன் ஆகிய நிறுவனங்கள் கைக்கோர்த்துள்ளது. இரு நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இது எப்படி செயல்படுகிறது:
வோடபோன் 1,37,000 டவர்கள் நாடு முழுவதும் வைத்துள்ளது.
பி.எஸ்.என்.எல் 1,14,000 டவர்கள் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தப்படி இரு நிறுவனங்களும் தங்களின் டவர்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் போது இந்த நிறுவனங்களின் டவர் பிரச்னையில் தீர்வு ஏற்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்