ஆப்நகரம்

பழைய நாணயங்களை வாங்கவோ விற்கவோ கூடாது? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

நீங்களும் பழைய நாணயம் அல்லது பழைய ரூபாய் நோட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்பவராக இருந்தால் இந்த முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

Samayam Tamil 4 Oct 2022, 8:58 am
நீங்கள் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்கவோ அல்லது வாங்கவோ தயாராக இருந்தால், கவனமாக இருங்கள். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil old coins sale


கடந்த சில நாட்களாக பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை வாங்கி விற்கும் போக்கு தீவிரமடைந்துள்ளது. பலர் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்வதற்காக சில மோசடி அமைப்புகள் ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அப்படி நீங்களும் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்கவோ அல்லது வாங்கவோ தயாராக இருந்தால், முதலில் ரிசர்வ் வங்கியின் இந்த தகவலை கண்டிப்பாக சரிபார்க்கவும். ஆன்லைன் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இதற்காக தினமும் புதுப்புது வழிகளை கண்டுபிடித்து வருகிறார்.

இது குறித்து ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை சில நிறுவனங்கள் தவறாகவும், பல்வேறு ஆன்லைன், ஆஃப்லைன் தளங்கள் மூலமாகவும் பயன்படுத்துவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பதற்கான கட்டணம்/கமிஷன் அல்லது வரிகளை மக்களிடம் ரிசர்வ் வங்கி கேட்பதில்லை.

கிழிந்த நோட்டு ஏடிஎம்மில் வந்தால் என்ன செய்வது?
இதுபோன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு யாரிடமும் கட்டணம் அல்லது கமிஷன் எதுவும் கேட்கப்படுவதில்லை. அதேபோல, இவ்வாறான செயல்பாடுகளுக்காக எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ எந்தவொரு அங்கீகாரத்தையும் ரிசர்வ் வங்கி வழங்கவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மேலும், இதுபோன்ற போலியான மற்றும் மோசடியான சலுகைகளுக்கு பலியாக வேண்டாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்