ஆப்நகரம்

பேடிஎம் நிறுவனத்துக்கு தடை.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!

பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

Samayam Tamil 11 Mar 2022, 6:22 pm
பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி (Paytm Payments Bank) புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil paytm


கண்காணிப்பு பிரச்சினைகள் காரணமாக பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், “புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கிக்கு உடனடியாக தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் வங்கியின் ஐடி அமைப்பை தணிக்கை செய்ய ஐடி தணிக்கை நிறுவனம் ஒன்றை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டி உயர்வு.. ஹேப்பி நியூஸ்!
பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டுமெனில், ஐடி தணிக்கையாளர்களின் அறிக்கையை பார்த்தபின், ரிசர்வ் வங்கியிடம் உரிய அனுமதி பெற்று சேர்க்க வேண்டும். பேடிஎம் வங்கியில் கண்காணிப்பு பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

பேடிஎம் பங்கு விலை தொடர்ந்து சரிந்துகொண்டே வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் விலை பேடிஎம் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று பங்கு வர்த்தகத்தில் பேடிஎம் பங்கு விலை கடுமையாக சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்