ஆப்நகரம்

டெபிட் கார்டு கட்டணங்களை மாற்றியமைத்த ஆர்பிஐ.!

டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ரிசர்வ் வங்கி குறைத்துள்ள திட்டம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

TNN 11 Dec 2017, 10:17 am
டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ரிசர்வ் வங்கி குறைத்துள்ள திட்டம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
Samayam Tamil reserve bank of india to changes the credit debit card payment for increasing digital money transaction
டெபிட் கார்டு கட்டணங்களை மாற்றியமைத்த ஆர்பிஐ.!


எம்டிஆர் கட்டணம் என்பது வங்கிகள் வர்த்தக நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணமாகும். இதை பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் வசூலிப்பதற்கு பதிலாக மொத்த வரவு செலவு அடிப்படையில் வசூலிக்க முடிவு செய்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகளை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையில், சமீப காலங்களில் Point of Sale இயந்திரங்கள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இதனால் டெபிட் கார்டுகளுக்கான MDR கட்டணங்களை முறைப்படுத்துவது முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளது.



பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை 80 சதவீதம் அதிகரித்ததுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் பணமற்ற பரிவர்த்தனை மதிப்பு ரூ.1,800 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் வரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய அரசும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது. இதில் பாயின்ட் ஆப் சேல் கருவிகள் மூலம் நடைபெறும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் மிக முக்கிய பங்கு வகிப்பவை. எனவே, இதற்காக எம்டிஆர் எனப்படும் வணிக தள்ளுபடி கட்டணத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்