ஆப்நகரம்

இந்த மொபைல் ஆப் யூஸ் பண்ணாதிங்க.. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

sRide மொபைல் ஆப் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

Samayam Tamil 23 Feb 2022, 5:33 pm
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் நூதன மோசடி கும்பல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது. சில நிறுவனங்கள் உரிய அனுமதியும், அங்கீகாரமும் பெறாமலேயே செயல்பட்டு வருவது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
Samayam Tamil apps


இந்நிலையில், sRide எனப்படும் மொபைல் ஆப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியிடம் sRide ஆப் உரிய அனுமதி பெறாமலேயே செயல்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் ஹரியானா மாநில குர்கானில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. கார் பூலிங் சேவையை sRide நிறுவனம் பிரீபெய்ட் அடிப்படையில் வழங்கி வருகிறது. எனினும், பரிவர்த்தனை மற்றும் செட்டில்மெண்ட் சிஸ்டம் சட்டம் 2007 கீழ் ரிசர்வ் வங்கியிடம் sRide நிறுவனம் அனுமதி பெறவில்லை.

பேங்க் கொள்ளையர்கள் அட்ராசிட்டி.. SBI கொடுத்த அட்வைஸ் இதுதான்!
எனவே, sRide ஆப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. மேலும், sRide நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் அனைவரும் சொந்த ரிஸ்க்கில் இயங்கி வருவதாக ரிசர்வ் அங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் அனுமதியே பெறாமல் பரிவர்த்தனை சார்ந்த செயல்களில் ஈடுபடும் ஆப்களை நம்பி மக்கள் தங்கள் பணத்தை அனுப்பக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்