ஆப்நகரம்

Inflation: பணவீக்கம் லேசாக குறைவு.. ஆனாலும் பிரச்சினைதான்!

கடந்த ஜூன் மாதம் பணவீக்கம் லேசாக குறைந்துள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 12 Jul 2022, 6:16 pm
கடந்த சில மாதங்களாக பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போனது. விலைவாசி உயர்வால் பொதுமக்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் சில நடவடிக்கைகள் எடுத்தன.
Samayam Tamil cash


இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான பணவீக்கம் பற்றிய விவரங்களை அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூன் மாதத்தில் பணவீக்கம் மிக லேசாக குறைந்துள்ளது. எனினும், இன்னும் பணவீக்க விகிதம் அதிகமாகவே உள்ளது.

ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7.01% ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய மே மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7.04% ஆக இருந்தது. 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.26% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

5G ஸ்பெக்ட்ரம் ஏலம்.. அம்பானி Vs அதானி.. சூடுபிடிக்கும் போட்டி!
ஜூன் மாதத்துடன் கடந்த ஆறு மாதங்களாக பணவீக்கம் 6 விழுக்காடுக்கு மேல் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பணவீக்க விகிதம் 2% முதல் 6% வரை இருக்க வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள பாதுகாப்பான வரம்பு.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி ஏற்கெனவே ரெப்போ வட்டி விகிதத்தை 4.90% ஆக உயர்த்தியுள்ளது. இதுபோக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்