ஆப்நகரம்

கார் விற்பனை சரிவு... இந்த மாசமாவது உயருமா?

ஜூன் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 38 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

Samayam Tamil 21 Jul 2020, 4:48 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் வேலை இல்லாமல் வருமானம் குறைந்தது. இதனால் கார், நகை உள்ளிட்ட பொருட்களை வாங்கும் எண்ணம் மக்களிடையே குறைந்துபோனது. ஏப்ரல், மே மாதங்களில் உள்நாட்டு வாகன விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. சில நிறுவனங்கள் ஒரு காரைக் கூட விற்பனை செய்யாமல் தடுமாறின. எனினும் ஜூன் மாதத்தில் ஊரடங்கு தளர்ந்து வாகன விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது.
Samayam Tamil car sales


ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் சில்லறை விற்பனையில் மொத்தம் 2,05,011 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. பயணிகள் வாகனங்கள் பிரிவில் மொத்தம் 1,26,417 மொத்தம் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது சென்ற ஆண்டின் ஜூன் மாத விற்பனையை விட 38.34 சதவீதம் குறைவாகும். இருசக்கர வாகனங்கள் பிரிவில் 40.92 சதவீத வீழ்ச்சியுடன் மொத்தம் 7,90,118 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 2019 ஜூன் மாதத்தில் வாகன விற்பனை எண்ணிக்கை 13,37,462 ஆக இருந்தது.

Car Loan: மோசடி செய்த வங்கி அதிகாரிகளுக்கு ஆப்பு!

வர்த்தக வாகனங்கள் பிரிவில் வாகன விற்பனை எண்ணிக்கை 64,976லிருந்து 10,509 ஆகக் குறைந்துள்ளது. இது 83.83 சதவீத வீழ்ச்சியாகும். மூன்று சக்கர வாகனங்கள் பிரிவில் 75.43 சதவீத வீழ்ச்சியுடன் 11,993 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சில்லறை விற்பனைப் பிரிவில் மொத்தம் 1,230 நிறுவனங்களிடமிருந்து பெற்ற விவரங்களைக் கொண்டு இத்தகவலை ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை மாதத்திலும் இதே மந்தநிலை நீடிக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்யணுமா? அப்போ இதைப் படிங்க!

வர்த்தக வாகனங்கள் பிரிவில் அரசு தரப்பிலிருந்து சலுகைகள் அறிவித்து விற்பனையை மேம்படுத்த உதவ வேண்டும் என்று இத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்