ஆப்நகரம்

ரயில்வே தலையில் துண்டைப் போட்ட கொரோனா ஊரடங்கு!

ரயில்வே துறையின் நடைமேடை டிக்கெட் விற்பனை வாயிலான வருவாய் 94 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

Samayam Tamil 14 Jun 2021, 2:08 pm
இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே கொரோனா பாதிப்பால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க பொதுவிடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலும் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் வருகை பாதிக்கப்பட்டு, அதன் வாயிலாக ரயில்வே துறைக்குக் கிடைக்கும் வருவாயும் முடங்கியுள்ளது. குறிப்பாக, 2020-21 நிதியாண்டில் மட்டும் ரயில்வே நடைமேடை டிக்கெட் விற்பனை வாயிலான வருவாய் 94 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
Samayam Tamil railway


மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கௌர் என்பவரால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு இது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. 2020-21 நிதியாண்டில் பிப்ரவரி வரையில் மட்டும் நடைமேடை டிக்கெட் விற்பனை வாயிலாக ரயில்வே துறைக்கு ரூ.10 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் இதற்கு முந்தைய 2019-20 நிதியாண்டில் ரயில்வே நடைமேடை டிக்கெட் விற்பனை வாயிலாக ரூ.160.87 கோடி வருவாய் கிடைத்திருந்தது. இது முந்தைய 5 ஆண்டுகளில் மிக அதிகமாக வருவாயாகும்.

Gold rate: நகை வாங்க நல்ல வாய்ப்பு!

2020ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்னரே ரயில்வே துறை சார்பில் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, நடைமேடைகளில் கூட்டம் அதிகமாகக் கூடாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல, நடைமேடை டிக்கெட் கட்டணமும் 10 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இதனால் தேவையில்லாத பயணிகள் வருகை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்