ஆப்நகரம்

விரைவில் ரிலையன்ஸ் ஜியோ சேவை அறிமுகம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், விரைவில் அதிகாரப்பூர்வமாக தொலைத்தொடர்பு சேவையை தொடங்க உள்ளது.

TNN 5 Aug 2016, 2:13 pm
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், விரைவில் அதிகாரப்பூர்வமாக தொலைத்தொடர்பு சேவையை தொடங்க உள்ளது.
Samayam Tamil rjio commercial launch soon
விரைவில் ரிலையன்ஸ் ஜியோ சேவை அறிமுகம்!


முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 4ஜி சேவை மூலமாக, இந்திய தொலைத்தொடர்புத் துறையில் அதிரடியாக களம் இறங்க உள்ளது. இதற்காக, மலிவு விலையிலான 4ஜி ஸ்மார்ட்ஃபோன்களையும், அந்நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே, சில மாதங்கள் முன்பாக, முதல்கட்ட சோதனை முயற்சியாக, ரிலையன்ஸ் ஜியோ சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் அடுத்த சில மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய, ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நிர்ணயித்த வர்த்தக இலக்கை எட்டுவதற்காக, அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உடனும், முகேஷ் அம்பானி தொழில்கூட்டு செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்