ஆப்நகரம்

ரூ.20,000 பென்சன் வேணுமா? இந்தத் திட்டத்தில் சேருங்க!

வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பென்சன் கிடைக்கும்!

Samayam Tamil 24 Dec 2020, 1:06 pm
எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் அக்‌ஷய் திட்டத்தின் கீழ் மாதம் 20,000 ரூபாய் பென்சன் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
Samayam Tamil rs 20000 pension for life know this lic policy
ரூ.20,000 பென்சன் வேணுமா? இந்தத் திட்டத்தில் சேருங்க!


பென்சன் ஏன் அவசியம்?

இந்த இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை செய்யலாம். ஆனால் உங்களது ஓய்வுக் காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க ஆயத்தமாக வேண்டும். உங்களது இறுதிக் காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்சன் அல்லது முதலீட்டுத் தொகை உதவியாக இருக்கும். அதற்கு எல்ஐசி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

ஜீவன் அக்‌ஷய் பாலிசி!

எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வரும் பென்சன் திட்டங்களில் எல்ஐசி ஜீவன் அச்ஷய் திட்டமும் மிக முக்கியமான ஒன்றாகும். நீங்கள் ஓய்வு பெறும் திட்டம் இருந்தாலோ அல்லது நிதி நெருக்கடி இல்லாத சுகமான வாழ்க்கை வாழ விரும்பினாலோ எல்ஐசி அதற்கு உதவுகிறது. இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் ஒரேயொரு பிரீமியம் செலுத்தி உங்கள் வாழ்நாள் முழுவதும் மாதத்துக்கு 20,000 ரூபாய் பென்சன் பெற முடியும்.

வயது வரம்பு!

நீங்கள் இந்த பாலிசியை வாங்குவதற்குக் குறைந்தபட்சம் 30 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதேபோல அதிகபட்சம் 85 வயது வரையில் இந்த பாலிசியை வாங்கலாம். இந்தியக் குடிமகன் யாராக இருந்தாலும் அவர்கள் இந்தப் பாலிசியை வாங்கிப் பயன்பெறலாம். நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இதில் கிடையாது.

பிரீமியம் எவ்வளவு?

எல்ஐசி ஜீவன் அக்‌ஷய் திட்டத்தில்பாலிசி -4இல் மொத்தம் 10 ஆப்சன்கள் உள்ளன. அதில் ஆப்சன் A என்பதைத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் மாதா மாதம் ரூ.20,000 பென்சன் வாங்க முடியும். அதுவும் ஒரே பிரீமியத்தில். பிரீமியம் தொகையாக நீங்கள் மொத்தம் ரூ.40,72,000 முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் மாதத்துக்கு ரூ.20,967 என்ற அளவில் பென்சன் வந்துகொண்டிருக்கும். அதேபோல, மாதா மாதம் பென்சன் வாங்காமல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு வருடத்துக்கு ஒரு முறையே பென்சன் வாங்கிக் கொள்ளலாம். மூன்று மாதங்களுக்கு ரூ.63,250, ஆறு மாதங்களுக்கு ரூ.1,27,600 மற்றும் ஒரு வருடத்துக்கு ரூ.2,60,000 என்ற அளவில் பென்சன் கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்