ஆப்நகரம்

85% ஏடிஎம்களில் பணம் உள்ளது: பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர்

தினமும் மூவாயிரம் கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படுவதாக பொருளாதார விவகாரகங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர காரக் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 May 2018, 11:06 pm
தினமும் மூவாயிரம் கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படுவதாக பொருளாதார விவகாரகங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர காரக் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil New Delhi: Economic Affairs secretary Subhash Chandra Garg during the launch of ...
Economic Affairs secretary Subhash Chandra Garg during the launch of CriSidEx, a sentiment index for micro, small and medium enterprises (MSME) developed by CRISIL and SIDBI in New Delhi on Saturday.Photo by Vijay Verma


அண்மையில் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பல ஏடிஎம்-இல் பணம் இல்லாமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், தற்போது அந்த நிலைமை சீரடைந்துள்ளதாகவும், கடந்த வாரம் பணப்புழக்கம் குறித்து ஆய்வு செய்ததில், நாடு முழுவதும் 85% ஏடிஎம்களில் பணம் உள்ளதாகவும் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

தினமும் மூவாயிரம் கோடி ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படுவதாகவும், 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் புழக்கத்தில் இருப்பதாகவும் கூறிய அவர், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கள்ள நோட்டுக்கள் அனைத்தும் குறைந்து விட்டதாகவும், கள்ள நோட்டுக்களை ஒழிப்பதில் ரிசர்வ் வங்கி முழுமுயற்சியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்