ஆப்நகரம்

வேலை இல்லாதவர்களுக்கு ரூ.1 லட்சம் கடன்!

தமிழகத்தில் ஊரக மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ் வேலையற்ற தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் கடனை அரசு வழங்குகிறது.

Samayam Tamil 21 Jul 2020, 7:58 pm
கிராமப்புற ஏழைகளுக்கு உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டு 2011ஆம் ஆண்டில் ஆஜீவிகா என்ற கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான தேசிய இயக்கம் மத்திய ஊரக வளர்ச்சிக்கான அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கான நிதியுதவியில் உலக வங்கியும் பங்களித்து வருகிறது. சுயமாகவே தங்களை நிர்வகித்துக் கொள்ளும் சுய உதவிக் குழுக்களின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 6 லட்சம் கிராமங்களில் 7 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இந்த வசதியை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
Samayam Tamil loan


தமிழகத்தைப் பொறுத்தவரையில், 2020-21 நிதியாண்டில் தமிழகத்தில் உள்ள 1,49,160 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,274.40 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதர மாநிலங்களில் கொரோனா பாதிப்பால் தங்களது வேலைகளை இழந்து வீட்டிற்குத் திரும்பியுள்ள தொழிலாளர்கள் சொந்தமாக வர்த்தகம் செய்வதற்காக ரூ.1 லட்சம் கடன் பெற இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு ஆண்களுக்கு 18 முதல் 35 வயது வரையும், பெண்களுக்கு 18 முதல் 40 வயது வரை ஆகும்.

கொரோனாவால் இறந்த ஊழியர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்!

இதற்கான பயனாளிகள் இந்தக் கடனைப் பெறுவதற்கு ஊரக வட்டங்களில் உள்ள வறுமை ஒழிப்புத் திட்ட அலுவலகங்களையோ அல்லது தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகங்களையோ அணுக வேண்டும். இந்தியாவுக்கு உள்ளேயோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால் அவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதில் எப்படி முதலீடு செய்யலாம்? சிறந்த ஐடியா இதுதான்!

பயனாளிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உரிய மட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட பிறகு தேவைக்கு ஏற்ப ஊரக வறுமைக் குறைப்புக்கான குழுவின் வங்கிக் கணக்குக்கு இந்த நிதி மாற்றம் செய்யப்படும். இவ்வாறு நிதியைப் பெற்றவுடன் ஊரக வறுமைக் குறைப்புக்கான குழு தொழில்முனைவரின் தனிநபர் வங்கிக் கணக்கிற்கு அந்தத் தொகை செலுத்தப்படும்.

ஊரடங்கின் விளைவாக தினக்கூலிகளும், தொழிலாளர்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பைப் பெறவும் அரசின் இந்த நிதியுதவி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பயனாளிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்