ஆப்நகரம்

எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. இனி இந்த சேவைகள் கிடைக்காது!

எஸ்பிஐ கார்டு நிறுவனம் கார்டுதாரர்களுக்கு ஏர்போர்ட் ஓய்வறை வசதியை ரத்து செய்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 7 Apr 2023, 12:23 pm
எஸ்பிஐ கார்டு (SBI) கார்டு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான ஏர்போர்ட் ஓய்வறை (Airport Lounge) வசதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
Samayam Tamil sbi card
sbi card


எஸ்பிஐ கார்டு நிறுவனம் தனது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு ஏர்போர்ட் ஓய்வறை வசதிகளை வழங்கி வந்தது. இந்நிலையில், மே 1ஆம் தேதி முதல் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் உள்நாட்டு ஏர்போர்ட் ஓய்வறை (Domestic airport lounge) சேவைகளை பயன்படுத்த முடியாது என எஸ்பிஐ கார்டு தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கிரெடிட் கார்டு வாயிலாக செலவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த கேஷ்பேக் (cashback) தொகைக்கும் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இதன்படி, இனி ஒரு சுழற்சியில் (statement cycle) அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை மட்டுமே கேஷ்பேக் பெற முடியும்.

இதுபோக நகைகள், பள்ளி கட்டணம், கல்வி சார்ந்த கட்டணங்கள், இன்சூரன்ஸ் சேவை கார்டுகள், பரிசுப்பொருட்கள், souvenir கடைகள், quasi cash, ரயில்வே போன்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இனி கேஷ்பேக் வழங்கப்படாது என எஸ்பிஐ கார்டு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. குறிப்பாக கிரெடிட் கார்டு வாயிலாக வாடகை செலுத்துவோருக்கான கட்டணம் 99 ரூபாயில் இருந்து 199 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

எஸ்பிஐ கார்டு நிறுவனம் அண்மைக்காலமாக மிக அதிக வளர்ச்சியை எட்டியுள்ளது. போட்டியாளர்களான எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய நிறுவனங்களை காட்டிலும் எஸ்பிஐ கார்டு அதிக கிரெடிட் கார்டுகளை விற்பனை செய்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் தகவல்படி பிப்ரவரி மாதத்தில் எஸ்பிஐ கார்டு நிறுவனம் சுமார் 3 லட்சம் கிரெடிட் கார்டுகளை விற்பனை செய்துள்ளது. போட்டியாளர்களான எச்டிஎஃப்சி பேங்க் 60,000 கிரெடிட் கார்டுகளையும், ஐசிஐசிஐ பேங்க் 80,000 கிரெடிட் கார்டுகளையும் விற்பனை செய்துள்ளன. கடந்த டிசம்பர் காலாண்டு நிலவரப்படி எஸ்பிஐ கார்டு நிறுவனத்துக்கு 1.5 கோடி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்