ஆப்நகரம்

இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு

இந்தியாவிலேயே கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனை வசதியை முதலில் அளிக்கும் வங்கி எஸ்பிஐ என்ற பெருமை அந்த வங்கிக்குக் கிடைத்துள்ளது. இந்த வசதியை இந்தியா முழுவதும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.

Samayam Tamil 16 Mar 2019, 7:49 pm

ஹைலைட்ஸ்:

  • யோனோ கேஷ் என்ற மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • ஏடிஎம்களில் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil 1552648732-SBI_News
ஏடிஎம்களில் கார்டு இல்லாமலே யோனோ கேஷ் (Yono Cash) மொபைல் ஆப் மூலம் பணம் எடுக்கலாம் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி. எஸ்.பி.ஐ. யோனோ என்ற டிஜிட்டல் பேங்கிங் சேவையை கடந்த 2017 நவம்பரில் ஆரம்பித்தது.

தற்போது யோனோ கேஷ் என்ற மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.களில் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்.

இந்தியாவிலேயே கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனை வசதியை முதலில் அளிக்கும் வங்கி எஸ்பிஐ என்ற பெருமை அந்த வங்கிக்குக் கிடைத்துள்ளது. இந்த வசதியை இந்தியா முழுவதும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.

வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற யோனோ கேஷ் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். அதில், 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும்.

இந்த எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்.எஸ்.எம். அனுப்பி உறுதிசெய்யப்படும். பின், ஏ.டி.எம்.களில் யோனோ கேஷ் எண் மற்றும் பாஸ்வேர்ட்டை பதிவு செய்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்