ஆப்நகரம்

சீனியர் சிட்டிசன்களுக்கு சூப்பரான திட்டம்.. சுதந்திர தினத்தில் அறிமுகம்!

எஸ்பிஐ வங்கி அதிக வட்டி விகிதம் வழங்கும் உத்சவ் டெபாசிட் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Aug 2022, 5:12 pm
இன்று இந்தியாவின் 76ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, எஸ்பிஐ (SBI) வங்கி சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்துக்கு எஸ்பை உத்சவ் டெபாசிட் (SBI Utsav Deposit) என பெயரிடப்பட்டுள்ளது.
Samayam Tamil senior citizen


எஸ்பிஐ உத்சவ் டெபாசிட் திட்டத்தில் அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. எனினும், இதுவொரு குறுகிய கால சலுகை என்பதால் பயன்பெறுவதற்கு உடனடியாக முதலீடு செய்ய வேண்டும்.

இன்று (ஆகஸ்ட் 15) முதல் 75 நாட்களுக்கு எஸ்பிஐ உத்சவ் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில், 1000 நாட்களுக்கான ஃபிக்சட் டெபாசிட்டுக்கு 6.10% வட்டி வழங்குகிறது எஸ்பிஐ வங்கி. சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி கிடைக்கும்.

சுதந்திர தினத்தில் சூப்பர் அறிவிப்பு.. அதிக வட்டி வழங்கும் ஃபிக்சட் டெபாசிட்!
அதாவது, 1000 நாட்களுக்கான ஃபிக்சட் டெபாசிட்டுக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு 6.60% வட்டி கிடைக்கும். எனவே, எஸ்பிஐ உத்சவ் டெபாசிட் சீனியர் சிட்டிசன்களுக்கும் சாதகமாகவே உள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி ட்விட்டரில், “உங்கள் பணம் உங்களுக்காக கடுமையாக உழைக்கப்பட்டும். உங்கள் ஃபிக்சட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி விகிதம் வழங்குவதற்காக உத்சவ் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்