ஆப்நகரம்

உங்க பணத்துக்கு ஆபத்து... SBI எச்சரிக்கை!

ஆன்லைன் மூலமாக பணத்தைத் திருடும் மோசடியாளர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரித்துள்ளது.

Samayam Tamil 15 Jun 2021, 6:51 pm
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு நெட் பேங்கிங் விஷயத்தில் எச்சரிக்கை செய்துள்ளது. இதுகுறித்து தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ட்விட்டர் மூலம் விழிப்புணர்வு செய்துள்ளது. நெட் பேங்கிங் முறையில் வாடிக்கையாளர்களுக்கு நிறைய வசதிகள் இருந்தாலும் அதில் ஆபத்துகளும் உள்ளன. வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடும் மோசடியாளர்கள் தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. எனவே வாடிக்கையாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil SBI


என்ன செய்ய வேண்டும்?

>> https://Onlinesbi.com என்ற வெப்சைட் வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.

>> உங்களது லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரை அடிக்கடி ஆன்டி வைரஸ் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.

>> அடிக்கடி உங்களது பாஸ்வேர்டை மாற்ற வேண்டும்.

>> கடைசியாக உங்களது அக்கவுண்டில் எப்போது உள்நுழைந்தீர்கள் என்பதை எப்போதும் பார்க்கவும்.

என்ன செய்யக் கூடாது?

>> ஈமெயில் அல்லது SMS மூலமாக வரும் எந்தவொரு லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம்.

>> முன் பின் தெரியாத நபர்களின் ஆலோசனையின் பேரில் எந்தவொரு மொபைல் ஆப்பையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

>> ஈமெயில் அல்லது SMS மூலமாக வரும் சலுகைகளைத் தவிர்க்கவும். அப்படி வரும் காண்டாக்ட்களுக்கு உங்களது எந்தத் தகவலையும் பகிர வேண்டாம்.

>> பொது வைஃபை, இலவச வைஃபை போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்