ஆப்நகரம்

சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட்.. இனி அதிக வருமானம் கிடைக்கும்!

சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வருமானம் வழங்கும் சூப்பரான திட்டம்.

Samayam Tamil 1 May 2022, 9:04 am
சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கும் திட்டங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. காலம் காலமாக சீனியர் சிட்டிசன்கள் முதலீடு செய்து வந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களிலும் தற்போது அதிக வட்டி கிடைப்பதில்லை. இந்த சூழலில், சீனியர் சிட்டிசன்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டு அதிக வட்டி வழங்கும் ஒரு திட்டத்தை பற்றி பார்க்கலாம்.
Samayam Tamil scss offers high interest rate than many fd schemes for senior citizen check benefits and eligibility
சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட்.. இனி அதிக வருமானம் கிடைக்கும்!


​சீனியர் சிட்டிசன் என்றால் யார்?

60 வயதை தாண்டியவர்கள் சீனியர் சிட்டிசன்கள் (senior citizen) என அழைக்கப்படுகின்றனர். 80 வயதை தாண்டியவர்கள் மிக சீனியர் சிட்டிசன்கள் (Very senior citizen) என அழைக்கப்படுகின்றனர்.

​ரிஸ்க் இல்லா வருமானம்

வயது முதியவர்கள் என்பதால் சீனியர் சிட்டிசன்கள் பங்குச் சந்தை போன்ற ரிஸ்க்கான முதலீடுகளில் பணத்தை போடுவதில்லை. மாறாக சேமிப்பு திட்டங்கள், ஃபிக்சட் டெபாசிட் போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் பணத்தை போட்டு வட்டி வாயிலாக வருமானம் சம்பாதிக்கின்றனர்.

​குறைந்த வட்டி

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை குறைத்துவிட்டன. இதனால் சீனியர் சிட்டிசன்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சீனியர் சிட்டிசன்கள் அதிக வட்டி கிடைக்கும் மாற்றும் முதலீடுகளை பரிசீலிக்கலாம்.

​சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம்

சீனியர் சிட்டிசன்கள் பலன் பெற வேண்டும் என்பதற்காகவே சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. 60 வயதை தாண்டியவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

​முதலீடு

சீனியர் சிட்டிசன் சேமிப்பு கணக்கை 1000 ரூபாய் குறைந்தபட்ச டெபாசிட் உடன் தொடங்கலாம். அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம்.

​வட்டி

தற்போது சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் 7.4% வட்டி வழங்கப்படுகிறது. பல ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் கூட இவ்வளவு வட்டி விகிதத்தை வழங்குவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் வட்டி தொகை செலுத்தப்படும்.

​வரி சலுகை

இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80C கீழ் வரி சலுகைகளை பெறலாம்.

​மெச்சூரிட்டி

இத்திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் ஐந்து ஆண்டுகள். தேவைப்பட்டால் அதற்கு மேல் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்