ஆப்நகரம்

வீட்டிலிருந்தே வேலை... ஆன்லைனில் தேடி அலையும் இந்தியர்கள்!

கொரோனா பாதிப்புக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் வீட்டிலிருந்தே பார்க்கும் வேலைகளுக்கான தேடல் அதிரடியாக உயர்ந்துள்ளது.

Samayam Tamil 26 May 2021, 8:36 pm
சென்ற ஆண்டின் மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் தொழில் நடவடிக்கைகள் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்கின. இக்காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலைபார்க்க அனுமதித்தன. இது தொழிலாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நிறுவனங்களுக்கும் அலுவலக வாடகை, மின் கட்டணம், உள்ளிட்ட செலவுகள் குறைவதால் வீட்டிலிருந்தே வேலைபார்க்கும் முறையைப் பெரும்பாலான நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன.
Samayam Tamil wfh


இந்த ஆண்டிலும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் பழக்கமும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வேலை தேடுதல் தளமான இண்டீட் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, வீட்டிலிருந்தே பார்க்கும் வேலைகளுக்கான தேடல் 2021 ஏப்ரல் மாதத்தில் 966 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்ற வேலைகளுக்கு பெங்களூருவில்தான் அதிகப் பேர் தேடியுள்ளனர். பெங்களூருவில் இதுபோன்ற வேலைகளுக்கான தேடல் 16 சதவீதமாக இருந்துள்ளது. இந்த அளவு டெல்லியில் 11 சதவீதமாகவும், மும்பையில் 8 சதவீதமாகவும், ஹைதராபாத்தில் 6 சதவீதமாகவும், புனேவில் 7 சதவீதமாகவும் இருந்துள்ளது.

கூகுள் பே இருந்தாலே ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்... இது சூப்பர் வசதி!
வீட்டிலிருந்தே பார்க்கும் வேலைகளைத் தேடுவோரில் 60 முதல் 64 வயதினரும், 15 முதல் 19 வயதினரும், 40 முதல் 44 வயதினரும் தலா 13 சதவீதமாக இருந்துள்ளனர். அதைத் தொடர்ந்து 35 முதல் 39 வயதினரும், 20 முதல் 24 வயதினரும் 12 சதவீதத்தில் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் காலங்களில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் டிரெண்ட்தான் அதிகமாக இருக்கும் என்பதால் தற்போதைய கொரோனா காலத்திலும் இதுபோன்ற வேலையில் சேரவே இளைஞர்கள் விரும்புகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்