ஆப்நகரம்

இந்த நாணயம் உங்க கிட்ட இருக்கா? இருந்தா நீங்க லட்சாதிபதி!

ரூ.1.5 லட்சம் கிடைக்கும்!

Samayam Tamil 27 Jun 2021, 6:52 pm
25 பைசா நாணயம் உங்களிடம் இருந்தால் அதைக் கொடுத்து நீங்கள் ரூ.1.5 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம்.
Samayam Tamil sell this 25 paisa coin and get up to 1 5 lakh rupees
இந்த நாணயம் உங்க கிட்ட இருக்கா? இருந்தா நீங்க லட்சாதிபதி!


லட்சாதிபதியாக்கும் நாணயங்கள்!

பழைய நாணயங்களைச் சேகரித்து வைக்கும் பொழுதுபோக்கு பலரிடம் இருக்கும். அருங்காட்சியகம் போன்ற இடங்களிலும் பழைய நாணயங்களைச் சேகரித்து வைப்பார்கள். பழைய நாணயங்களைச் சேகரிக்கும் பலருக்கு நல்ல வாய்ப்பாக அமையும். உங்களிடம் பழைய, அரிய நாணயங்கள் இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட இடத்தில் நீங்கள் கொடுத்தால், லட்சம் - கோடி வரையில் கூட நீங்கள் சம்பாதிக்க முடியும். இது பொழுதுபோக்கு என்றாலும் அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். உங்களிடம் அரிய வகை நாணயம் இருந்தால் உடனடியாக இதைச் செய்யுங்கள்.

25 பைசா நாணயம்!

நீங்கள் பழைய நாணயங்களைக் கொடுத்து பணம் சம்பாதிக்க வேறு எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் வலைதளங்களிலேயே நீங்கள் உங்களிடம் உள்ள நாணயத்தைக் கொடுத்து பணம் சம்பாதிக்க முடியும். உங்களிடம் 25 பைசா நாணயம் இருந்தால் அதைக் கொடுத்து ரூ.1.5 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம். முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த நாணயம் சில்வர் கலரில் இருக்க வேண்டும்.

ஆன்லைன் மூலமாக விற்பனை!

இந்த நாணயத்தை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே நீங்கள் ஏலம் விடலாம். இதற்கான ஏலத்தை நடத்தும் ஆன்லைன் வலைதளங்கள் பல உள்ளன. இந்தியா மார்ட் வெப்சைட்டில் இதற்கான விற்பனை நடைபெறுகிறது.

https://dir.indiamart.com/impcat/old-coins.html

இந்த வலைதளத்தில் நீங்கள் பதிவு செய்து, நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தால் பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். உங்களது நாணயத்தை வாங்க விரும்புவோரிடம் ஏல அடிப்படையில் பணத்தை உயர்த்தி வாங்கவும் முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்