ஆப்நகரம்

இந்தியாவுக்கு வரும் டெஸ்லா.. எலான் மஸ்க் எடுக்கும் முடிவு என்ன?

டெஸ்லா நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் இந்த வாரம் இந்திய அரசு அதிகாரிகளை சந்திக்க இருக்கின்றனர்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 16 May 2023, 6:02 pm
டெஸ்லா நிறுவனத்தின் சீனியர் அதிகாரிகள் இந்த வாரம் இந்தியாவுக்கு வந்து மத்திய அரசு அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil tesla
tesla


எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இவ்வகையில், சீனாவிலும் ஷாங்காய் பகுதியில் டெஸ்லா நிறுவனத்தின் மிகப்பெரிய ஆலை இயங்கி வருகிறது.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது ஆலையை அமைக்க வேண்டும் என டெஸ்லா ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இந்தியாவில் இறக்குமதி வரி மிக அதிகமாக இருப்பதாகவும், எலக்ட்ரிக் வாகன கொள்கை திருப்திகரமாக இல்லை எனவும் டெஸ்லா CEO எலான் மஸ்க் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, “டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் தாராளமாக செய்துகொள்ளலாம். ஆனால் சீனாவில் இருந்து டெஸ்லா நிறுவனம் கார்களை இறக்குமதி செய்யக்கூடாது” என்று தெரிவித்தார்.

எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய வரி சலுகைகள் வேண்டும் என டெஸ்லா கூறி வந்த நிலையில், முதலில் இந்தியாவில் டெஸ்லா தனது கார்களின் உற்பத்தியை தொடங்க வேண்டுமெனவும், அதன்பிறகு வரி சலுகைகள் குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் இந்திய கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் மிக மூத்த அதிகாரிகள் இந்த வாரம் இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள் உள்பட மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளுடன் டெஸ்லா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை தொடங்கி வருகின்றன. இந்நிலையில், டெஸ்லா நிறுவனமும் இந்தியாவில் ஆலை அமைக்க முயற்சித்து வருகிறதா என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்