ஆப்நகரம்

உயர்வுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தைகள்

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

TNN 6 Oct 2016, 12:09 pm
மும்பை: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
Samayam Tamil sensex and nifty are high in the indian share markets today
உயர்வுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தைகள்


இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து, 28,324 புள்ளிகளில் வர்த்தகமானது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24 புள்ளிகள் அதிகரித்து, 8,768 புள்ளிகளில் வர்த்தகமானது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.46% மற்றும் ஐப்பான் நாட்டின் நிக்கேய் 0.57% உயர்ந்து காணப்பட்டது. சீனாவின் நிதிச்சந்தைக்கு இன்றும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.62% வரை அதிகரித்து முடிந்தது.

தற்போது சென்செக்ஸ் 66 புள்ளிகள் உயர்ந்து, 28,287 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் நிஃப்டி 23 புள்ளிகள் அதிகரித்து, 8,767 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

English Summary: Sensex and Nifty are high in the Indian share markets today.

அடுத்த செய்தி

டிரெண்டிங்