ஆப்நகரம்

சென்செக்ஸ்: முகேஷ் அம்பானியின் நிறுவனம் சறுக்கல்!

இன்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 174 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் இன்று பின்னடைவைச் சந்தித்துள்ளன.

Samayam Tamil 4 Dec 2019, 6:58 pm
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (டிசம்பர் 4) 40,606.01 புள்ளிகளில் தொடங்கியது. பின்னர் அதிகபட்சமாக 40,886.87 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 40,475.83 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. இறுதியில் சென்செக்ஸ் 174.84 புள்ளிகள் உயர்ந்து 40,850.29 புள்ளிகளில் நிலைபெற்றது. இது 0.43 சதவீதம் உயர்வாகும்.
Samayam Tamil சென்செக்ஸ்_ முகேஷ் அம்பானியின் நிறுவனம் சறுக்கல்


இந்தியாவுல தங்கம் இல்ல போல... இறக்குமதியை நம்பி வாழும் இந்தியா!

இன்றைய பங்கு வர்த்தகத்தில் அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மிக அதிகமாக 7.11 சதவீதம் ஏற்றம் கண்டன. அதன் பங்கு ஒன்றின் விலை ரூ.169.40 ஆக இருக்கிறது. அதைத் தொடர்ந்து, யெஸ் பேங்க்கின் பங்குகள் 5.97 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் 4 சதவீதமும், வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் 3.15 சதவீதமும் உயர்ந்துள்ளன.

இந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பணம்!

இன்றைய பங்கு வர்த்தகத்தில் வீழ்ச்சியைச் சந்தித்த நிறுவனங்களில் அதிகபட்சமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் மிக மோசமாக 1.67 சதவீதம் சரிந்துள்ளன. அதன் பங்கு ஒன்றின் விலை ரூ.1,552.55 ஆக இருக்கிறது. ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுஸுகி, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

பிஎஸ்என்எல்: ஊழியர்கள் வெளியேற்றமும் அரசின் விளக்கமும்!

தேசியப் பங்குச் சந்தையில், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்றைய நாள் தொடக்கத்தில் 11,969.95 புள்ளிகளில் தொடங்கியது. பின்னர் நிஃப்டி அதிகபட்சமாக 12,054.70 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 11,935.30 புள்ளிகளாகவும் இருந்தது. இறுதியில் 49 புள்ளிகள் உயர்ந்து 12,043.20 புள்ளிகளில் முடிவுற்றது. இது 0.41 சதவீத வளர்ச்சியாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்