ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் உயர்வு

ரிசர்வ் வங்கி, வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை எனத் தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை உயர்வுடன் முடித்தன.

TNN 7 Jun 2016, 4:47 pm
ரிசர்வ் வங்கி, வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை எனத் தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை உயர்வுடன் முடித்தன.
Samayam Tamil sensex ends above 27000 on rbis accomodative stance global cues
பங்குச்சந்தைகளில் உயர்வு


சர்வதேச சந்தை காரணங்கள் சாதகமாக இருந்தாலும், உள்நாட்டில் ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதிக்கொள்கை அறிக்கையை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை என, ரிசர்வ் வங்கி தெரிவிக்கவே, முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்தனர். முன்னணி நிறுவனப் பங்குகளை வாங்குவதில் அவர்கள் ஆர்வம் காட்டியதால், சந்தைகளும் உயர்ந்தன.

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளும் விலை அதிகரித்திருந்தன. குறிப்பாக, மும்பை பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்டிருந்த 1,481 பங்குகள் விலை அதிகரித்தும், 1,132 பங்குகள் விலை சரிந்தும் முடிவடைந்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்ந்து, 27,010 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 65 புள்ளிகள் அதிகரித்து, 8,266 புள்ளிகளாக முடிந்தது. இது 1% உயர்வாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்