ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவு

உயர்வுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தை சரிவுடன் முடித்துள்ளன.

TNN 16 Jun 2016, 5:03 pm
உயர்வுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தை சரிவுடன் முடித்துள்ளன.
Samayam Tamil sensex ends lower by 201 points as brexit concerns persist
பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவு


ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறினால், அது எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என, ஜப்பான் மற்றும் அமெரிக்க மத்திய வங்கிகள் கருத்து தெரிவித்துள்ளன. மேலும், இதற்கேற்ப நிதிக்கொள்கையில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வங்கிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் இருந்து முதலீடுகளை வெளியே எடுப்பதில் கவனம் செலுத்த தொடங்கினர். ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் மந்தநிலையில் காணப்பட்டது.

இந்திய சந்தைகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. உலோகம் மற்றும் பொதுத்துறை சார்ந்த பங்குகளை தவிர, எஞ்சிய அனைத்துத் துறை பங்குகளும் விலை சரிந்து முடிந்தன.

தனிப்பட்ட நிறுவனப் பங்குகளில், மாருதி சுசூகி இந்தியா பங்கு விலை 3% வரை சரிவடைந்தது. பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, என்டிபிசி, ஹீரோமோட்டோ கார்ப் ஆகிய பங்குகள் விலை 2% வரையும் குறைந்தன. அதேசமயம், ஏசியன் பெயிண்ட்ஸ், கெயில், விப்ரோ ஆகிய பங்குகள் 1% விலை உயர்ந்தும் முடிந்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 201 புள்ளிகள் சரிவடைந்து, 26,525 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 66 புள்ளிகள் குறைந்து, 8,141 புள்ளிகளாக முடிந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்