ஆப்நகரம்

சந்தைகளில் லேசான முன்னேற்றம்: சென்செக்ஸ் 93 புள்ளிகள் அதிகரிப்பு

நிப்டியில் ஹீரோ மோட்டோகார்ப், வேதாந்தா, ஏசியன் பெயிண்ட்ஸ் முதலிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இறங்குமுகமாக அமைந்தன. பிபிசிஎல், பஜாஜ் பைனான்ஸ், ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம் கொண்டன.

Samayam Tamil 17 Oct 2019, 5:25 pm

ஹைலைட்ஸ்:

  • சென்செக்ஸ் 93 புள்ளிகள் தாவி 38,599 புள்ளிகளில் நிலைத்தது.
  • நிப்டி 36 புள்ளிகள் ஏறி 11,464 புள்ளிகளில் நிலைகொண்டது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil stocks9_660_082818032834
இன்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 93 புள்ளிகளும் நிப்டி 36 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.
வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 93 புள்ளிகள் தாவி 0.24 சதவீதம் எழுச்சியுடன் 38,599 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 36 புள்ளிகள் ஏறி 0.31 சதவீதம் முன்னேறி 11,464 புள்ளிகளில் நிலைகொண்டது.

இந்த ஆண்டில் சென்செக்ஸ் 2530 புள்ளிகளைச் சேர்த்து 7 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நிப்டி 601 புள்ளிகளை சேர்த்து 5.5 சதவீதம் வளர்ந்துள்ளது.

தேசிய பங்குச்சந்தையில் நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு 0.16 சதவீதம் பின்னடைந்தன. சிறு நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு 0.3 சதவீதம் வளர்ந்தன.

நிப்டியில் பிபிசிஎல், பஜாஜ் பைனான்ஸ், ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம் கொண்டன. ஹீரோ மோட்டோகார்ப், வேதாந்தா, ஏசியன் பெயிண்ட்ஸ் முதலிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இறங்குமுகமாக அமைந்தன.

முக்கிய நிறுவனங்களின் பங்குகள்:

தேசிய பங்குச்சந்தையில் டிசிஎஸ் நிறுவன பங்குகள் மதிப்பு 0.41 சதவீதம் ஏறியது. ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் பங்குகள் மதிப்பு 0.69 சதவீதம் முன்னேறியது. ஹெச்டிஎப்சி வங்கி பங்குகளின் மதிப்பு 0.14 சதவீதம் விழுந்தது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 0.41 சதவீதம் கூடியது. ஹெச்டிஎப்சி குழுமத்தின் பங்குகள் மதிப்பு 1.88 சதவீதம் வளர்ந்தது.

முக்கிய துறைகளில் பங்குகள்:

தேசிய பங்குச்சந்தையில் துறை வாரியாக பார்க்கும்போது வங்கிகள் துறை பங்குகள் மதிப்பு 0.06 சதவீதம் மற்றும் ஐடி துறை பங்குகள் மதிப்பு 0.90 சதவீதம் வளர்ச்சி கண்டன. எப்.எம்.சி.ஜி. துறை பங்குகள் மதிப்பு 0.09 சதவீதம், ஆட்டோ துறை பங்குகள் மதிப்பு 0.19 சதவீதம், மற்றும் உலோகத் துறை பங்குகள் மதிப்பு 0.37 சதவீதம் சறுக்கின.

அடுத்த செய்தி

டிரெண்டிங்