ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் 1% சரிவு

புதன்கிழமை பங்கு வர்த்தகத்தில், இந்திய சந்தைகள் 1% சரிவுடன் முடிந்துள்ளன.

TOI Contributor 26 Oct 2016, 4:09 pm
புதன்கிழமை பங்கு வர்த்தகத்தில், இந்திய சந்தைகள் 1% சரிவுடன் முடிந்துள்ளன.
Samayam Tamil sensex plummets 251 points axis bank tanks 8 25
பங்குச்சந்தைகளில் 1% சரிவு


முந்தைய நாள் முடிவடைந்த அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தன. இதன் பாதிப்பில், ஜப்பானின் நிக்கை உள்ளிட்ட பெரும்பாலான ஆசிய பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் மந்தநிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக தொடக்கம் முதலே, ஏற்ற, இறக்கம் கலந்திருந்தன. நாளை (அக்.,27) அக்டோபர் மாதத்திற்கான முன்பேர வர்த்தகக் கணக்கை நேர் செய்யும் நாள் என்பதால், முதலீட்டாளர்கள் முந்தைய நாள் விலை உயர்வை பயன்படுத்தி, முன்னணி நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து, லாபத்தை வெளியே எடுத்தனர். இதனால், பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது.

வங்கி, உள்கட்டமைப்பு, மருந்து, மின்சாரம் ஆகிய துறை பங்குகள் அதிகபட்ச விலை சரிவை சந்தித்தன. அதேசமயம், நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள் துறை சார்ந்த பங்குகள் விலை அதிகரித்தும் இருந்தன.

தனிப்பட்ட நிறுவனப் பங்குகளில், ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் விலை குறைந்தும், ஏர்டெல், ஹீரோமோட்டோ கார்ப், மாருதி சுசூகி இந்தியா போன்ற பங்குகள் விலை உயர்ந்தும் முடிந்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 255 புள்ளிகள் சரிந்து, 27,836 புள்ளிகளாக நிலைபெற்றது. இது ஒரு சதவீத சரிவாகும். தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 76 புள்ளிகள் குறைந்து, 8,615 புள்ளிகளாகவும் முடிந்தது.

English Summary:

The Sensex and Nifty were trading down by nearly one per cent, dragged lower by financial stocks such as Axis Bank after the lender reported a quarterly profit slump, with weak global cues further weighing on the sentiment.

அடுத்த செய்தி

டிரெண்டிங்