ஆப்நகரம்

பங்குச்சந்தைகள் 1.37% உயர்வு

சர்வதேச சந்தை காரணங்களால், திங்கள்கிழமை வர்த்தகத்தை, 1.37% உயர்வுடன் இந்திய பங்குச்சந்தைகள் முடித்துள்ளன.

TOI Contributor 11 Apr 2016, 4:05 pm
சர்வதேச சந்தை காரணங்களால், திங்கள்கிழமை வர்த்தகத்தை, 1.37% உயர்வுடன் இந்திய பங்குச்சந்தைகள் முடித்துள்ளன.
Samayam Tamil sensex surges 339 points power teck stocks hog the limelight
பங்குச்சந்தைகள் 1.37% உயர்வு


ஆசிய, ஐரோப்பிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. உள்நாட்டில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, சரிவில் இருந்து மீட்சிபெற்றது. முன்னணி நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதில், கடந்த வாரம் வெளியான இன்ஃபோசிஸ் நிதிநிலை முடிவுகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

இதன் எதிர்பார்ப்பில், மின்சாரம்,தொழில்நுட்பம் மற்றும் உலோகத் துறை பங்குகளில் முதலீடு அதிகரித்தது. இதனால், சந்தைகளிலும் கிடுகிடு உயர்வு காணப்பட்டது.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 348 புள்ளிகள் அதிகரித்து, 25,022 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 116 புள்ளிகள் உயர்ந்து, 7,671 புள்ளிகளாக நிலைபெற்றது. இது 1.37% உயர்வாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்