ஆப்நகரம்

Share Market: சென்செக்ஸ் பாசிட்டிவ்... இன்று ஹாட் ஷேர் இதுதான்!

இன்று பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

Samayam Tamil 28 Jul 2020, 10:13 am

இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியபிறகு சென்செக்ஸ் 162.69 புள்ளிகள் உயர்ந்து 38,097.42ஐ தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை நிஃப்டி 57.50 புள்ளிகள் உயர்ந்து 11,189.30ஐ தொட்டுள்ளது.
Samayam Tamil பங்குச் சந்தை


சென்செக்ஸில் அதிகபட்சமாக டெக் மகிந்த்ரா பங்கு விலை 3.31% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக மகிந்த்ரா 3.11%, மாருதி சுஸுகி 2.05%, இண்டஸ் இண்ட் பேங்க் 1.95%, பஜாஜ் ஆட்டோ 1.78%, பஜாஜ் பைனான்ஸ் 1.59%, பஜாஜ் ஃபின்செர்வ் 1.47%, டிசிஎஸ் 1.24%, ஹெச்டிஎஃப்சி பேங்க் 1.01%, டாடா ஸ்டீல் 1.01% உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக ஐசிஐசிஐ பேங்க் 0.88% சரிந்துள்ளது. அடுத்தபடியாக பரவ் கிரிட் 0.52%, டைடன் 0.31%, ஏசியன் பெயிண்ட்ஸ் 0.25%, எண்டிபிசி 0.23%, ஓஎன்ஜிசி 0.19%, இன்ஃபோசிஸ் 0.18% சரிந்துள்ளன.

கொரோனா பாதிப்பு: வட்டியைக் குறைக்குமா ரிசர்வ் வங்கி?

நிஃப்டியில் அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 3.34% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக டெக் மகிந்த்ரா 2.63%, மகிந்த்ரா 2.61%, பாரத் பெட்ரோலியம் 2.34%, ஹிண்டால்கோ 2.21%, இண்டஸ் இண்ட் பேங்க் 2.19%, ஹீரோ மோட்டோகார்ப் 2.12% உயர்ந்துள்ளன.

அதிகபட்சமாக பார்தி இன்ஃப்ராடெல் 2.42% சரிந்துள்ளது. அடுத்தபடியாக ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் 1.69%, கிரசிம் 0.65%, டைடன் 0.57%, இன்ஃபோசிஸ் 0.47%, ஓஎன்ஜிசி 0.47%, பவர் கிரிட் 0.41%, எண்டிபிசி 0.34%, எல்&டி 0.33% சரிந்துள்ளன.

ஈஎம்ஐ சலுகையை நீட்டிக்க வேண்டாம்!

இன்றைய ஹாட் பங்காக டெக் மகிந்த்ரா நல்ல முன்னேற்றத்தை எட்டியுள்ளது. ஜூன் காலாண்டில் டெக் மகிந்த்ரா நிறுவனத்தின் நிகர லாபம் 20.9% உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.0.03 உயர்ந்து ரூ.74.85ஐ தொட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்