ஆப்நகரம்

Stock Market: சறுக்கிய மார்க்கெட் - இன்றைய டாப் பங்குகள் என்ன?

இன்று பங்கு வர்த்தகத்தில் வங்கிப் பங்குகள், ஐடி பங்குகள் கடுமையாக சறுக்கியுள்ளன.

Samayam Tamil 14 Oct 2020, 10:33 am

இன்று காலை பங்கு வர்த்தகம் தொடங்கியபின் 10.15 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 256.19 புள்ளிகள் சரிந்து 40,369.32ஐ தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 86.55 புள்ளிகள் சரிந்து 11,847.95ஐ தொட்டுள்ளது.
Samayam Tamil பங்குச் சந்தை


சென்செக்ஸில் பஜாஜ் ஃபின்செர்வ் பங்கு மட்டும் 1.14% உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக எண்டிபிசி பங்கு விலை 3.14% சரிந்துள்ளது. அடுத்தபடியாக ஓஎன்ஜிசி 3.11%, பவர் கிரிட் 2.27%, ஐடிசி 1.67%, ஐசிஐசிஐ பேங்க் 1.49%, ஹெச்டிஎஃப்சி பேங்க் 1.26%, சன் பார்மா 1.16%, இண்டஸ் இண்ட் 1.09% சரிந்துள்ளன.

ஆதார் - பான் இணைப்பு: தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

நிப்டியில் அதிகபட்சமாக பஜாஜ் ஃபின்செர்வ் பங்கு விலை 1.40% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக டைடன் 1.23%, பஜாஜ் பைனான்ஸ் 1.11% உயர்ந்துள்ளன.

அதிகபட்சமாக விப்ரோ பங்கு விலை 6.54% சரிந்துள்ளது. அடுத்தபடியான எண்டிபிசி 3.15%, கோல் இந்தியா 3.03%, ஓஎன்ஜிசி 2.97%, பாரத் பெட்ரோலியம் 2.97%, இந்தியன் ஆயில் 2.04%, டாடா மோட்டார்ஸ் 2.01% சரிந்துள்ளன.

இன்று சென்செக்ஸ், நிப்டி சறுக்கியதற்கு வங்கி பங்குகள், ஐடி பங்குகளின் சரிவே முக்கிய காரணம். அதிலும், விப்ரோ பங்கு மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 பைசா உயர்ந்து 73.45ஆக இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்