ஆப்நகரம்

ரயில் பயணிகள் அதிர்ச்சி.. டிக்கெட் கட்டணம் அதிரடி உயர்வு!

ரயில் டிக்கெட் கட்டணம் ஏப்ரல் 15 முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Apr 2022, 8:25 am
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்போருக்கு அதிர்ச்சியான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. டீசல் இன்ஜின்களில் இயங்கும் ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் இனி அதிக கட்டணம் வசூலிக்கப்படவிருக்கிறது. இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil train ticket


உண்மையில், டீசல் இன்ஜின்களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சர்சார்ஜ் (HCS) அல்லது டீசல் வரி ரூ.10 முதல் ரூ.50 வரை விதிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. டீசல் இன்ஜின்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் இயக்கப்படும் ரயில்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணம் பொருந்தும். டீசல் விலை அதிரடியாக உயர்ந்து வருவதால் அதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தில் ஏசி வகுப்புக்கு ரூ.50, ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூ.25, பொது வகுப்புக்கு ரூ.10 என மூன்று பிரிவுகளின் கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். புறநகர் ரயில் பயண டிக்கெட்டுகளில் இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் 50 சதவீதம் டீசலில் இயங்கும் ரயில்களை அடையாளம் காணுமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி.. இனி பிரச்சினையே இருக்காது!
இந்தப் பட்டியல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும்.
எனினும், ஏப்ரல் 15ஆம் தேதிக்கு முன் பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த கட்டண உயர்வால் ரயிலின் ஒட்டுமொத்த டிக்கெட் கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படைக் கட்டணத்தை உயர்த்தாமல் கூடுதல் கட்டணத்தைச் சேர்த்தும் சலுகைகளைக் குறைத்தும் வாடிக்கையாளர்களுக்கான சிரமங்களைக் குறைக்க ரயில்வே முயற்சிக்கிறது. ஆனாலும் டிக்கெட் விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்