ஆப்நகரம்

ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்கள் கவனத்துக்கு.. ஒளிந்திருக்கும் பெரிய ஆபத்து!

ஏடிஎம் ரசீது, சூப்பர் மார்க்கெட் கடைகளில் வழங்கப்படும் ரசீதுகளில் வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஆபத்து இருக்கிறது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 29 Mar 2023, 12:52 pm
கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்கும்போதோ அல்லது ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போதோ உங்களுக்கு பில் அல்லது பரிவர்த்தனை ரசீது கிடைக்கும். அந்த ரசீது நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியுமா? அது தொடர்பான அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
Samayam Tamil atm


சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமெரிக்க லாப நோக்கற்ற நிறுவனமான ’ஈக்காலஜி செண்டர்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ரசீது தாள்களில் அதிக அளவு பிஸ்பெனால் என்ற ரசாயனம் உள்ளது. குறிப்பாக பிஸ்பெனால் ஏ (பிபிஏ) மற்றும் பிஸ்பெனால் எஸ் (பிபிஎஸ்) ஆகியவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களாகும்.

இந்த நிறுவனம், அமெரிக்காவில் 22 வெவ்வேறு இடங்களில் உள்ள 144 பெரிய கடைகளில் இருந்து 374 ரசீதுகளை ஆய்வு செய்தது. மளிகைக் கடைகள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பல இடங்களில் பெறப்பட்ட மொத்த ரசீதுகளில் சுமார் 80 சதவீத ரசீதுகளில் பிஸ்பெனால் (பிபிஎஸ் அல்லது பிபிஏ) இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

ஈக்காலஜி செண்டர் சுற்றுச்சூழல் சுகாதார வழக்கறிஞரான மெலிசா கூப்பர் சார்ஜென்ட் இதுகுறித்து கூறுகையில், இந்த ரசீதுகள் ஹார்மோனை சீர்குலைக்கும் எனவும், அவை தோல் வழியாக உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள் பிஸ்பெனால் பூசப்பட்ட ரசீது காகிதத்தைப் பயன்படுத்துவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் நுகர்வோருக்கு ரசாயனம் கலந்த காகிதத்தை வழங்குவதை நிறுத்துமாறு இந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட ரசீதுகளில் சுமார் 20 சதவீத ரசீதுகளில் BPS போன்ற பாதுகாப்பான ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. BPS ஆனது BPAக்கு பாதுகாப்பான மாற்றாக சந்தைப்படுத்தப்படுகிறது.

இவை இரண்டும் புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய நாளமில்லாச் சுரப்பியை சீர்குலைக்கும் ரசாயனங்கள் ஆகும். நுகர்வோர் தவிர, இந்த கடைகளில் பணிபுரிபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை சில்லறை விற்பனையாளர்களை ரசீது தாளில் இருக்கும் பிஸ்பெனால் ரசாயனத்தை நீக்கிவிட் ரசீதுகளை அச்சிடுவோ அல்லது ரசீது வழங்குவதயே முற்றிலுமாக நிறுத்திவிட்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் டிஜிட்டல் ரசீது வசதியை வழங்க வேண்டும் எனவும் ஆலோசனை தெரிவித்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்