ஆப்நகரம்

பிஎஃப் பணம் வந்திருச்சா? உடனே எடுக்க ஈசி வழி!

நிறையப் பேருக்கு பிஎஃப் வட்டிப் பணம் வந்துகொண்டிருக்கிறது. அதை எப்படி வித்டிரா செய்து எடுப்பது என்று இங்கே பார்க்கலாம்.

Samayam Tamil 23 Oct 2021, 3:48 pm
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்துள்ள உறுப்பினர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் இனிப்பான செய்தி ஒன்று சமீபத்தில் வெளியாகியது. 2020-21 நிதியாண்டுக்கான வட்டிப் பணம் இந்த அக்டோபர் மாத இறுதிக்குள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 8.5 சதவீத வட்டிப் பணம் பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த வட்டிப் பணம் நேரடியாக பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
Samayam Tamil pf


ஒருவேளை உங்களது பிஎஃப் கணக்கில் வட்டிப் பணம் வரவு வைக்கப்பட்டிருந்தால் அதை எடுத்துப் பயன்படுத்தலாம். தீபாவளி பண்டிகை வரவிருக்கும் நிலையில் அதற்கு முன்பாக பிஎஃப் பணத்தை எடுத்துப் பயன்படுத்தலாம். முதலில் பிஎஃப் வட்டிப் பணம் வந்துவிட்டதா இல்லையா என்று பார்க்க வேண்டும். பேலன்ஸ் பார்க்க நிறைய வழிகள் உள்ளன. SMS மூலமாகவே மிக எளிதாக பேலன்ஸ் பார்க்க முடியும்.

உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து EPFOHO UAN ENG என டைப் செய்து 7738299899 என்ற நம்பருக்கு SMS அனுப்பினால் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்று தெரிந்துவிடும்.

பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு www.epfindia.gov.in என்ற வெப்சைட்டில் சென்று அதில் ‘Online Advance Claim’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Online Service பக்கத்தில் உள்ள Claim (Form-31,19,10C & 10D) ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.

உங்களுடைய பேங்க் அக்கவுண்ட்டின் கடைசி நான்கு இலக்கங்களைப் பதிவிட்டு வெரிஃபை செய்ய வேண்டும்.

அதன் பின்னர் ’Proceed’ கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக டிராப் டவுன் பாக்ஸில் ’PF Advance’ என்ற வசதியை தேர்வு செய்ய வேண்டும்.

பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும். அதற்கு மெடிக்கல் எமர்ஜென்ஸி என்று குறிப்பிடலாம்.

எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதைப் பதிவிட்டு காசோலையின் ஸ்கேன் காப்பியை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அடுத்ததாக ’Get Aadhaar OTP’ என்பதை கிளிக் செய்தால் மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட வேண்டும். submit கொடுத்தவுடன் கோரிக்கை ஏற்கப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்