ஆப்நகரம்

Pension: இனி செம லாபம்தான் - ஹெப்பி நியூஸ் மக்களே!

தேசிய பென்சன் திட்டத்தில் சிப் முதலீடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Sep 2020, 6:10 pm

இந்தியாவில் பென்சன் திட்டங்களை பொறுத்தவரை தேசிய பென்சன் திட்டம் (NPS) வெகுஜனங்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் அதிக லாபத்தையும் கொடுத்திருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தேசிய பென்சன் திட்டம் 11.11% வருமானம் கொடுத்திருக்கிறது.
Samayam Tamil Pension


இன்னும் சொல்லப்போனால், லிக்விட் டெட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், வங்கி சேமிப்புக் கணக்குகளை காட்டிலும் தேசிய பென்சன் திட்டம் அதிக வருமானத்தை கொடுத்திருக்கிறது.

இந்நிலையில், தேசிய பென்சன் திட்டத்தில் சிப் (SIP) முறையில் முதலீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சிப் முதலீட்டு முறை கடந்த சில ஆண்டுகளாக வெகுஜன மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக, இளைஞர்கள் சிப் முதலீட்டில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி?

சிப் என்றால், ஒரே தவணையில் பெரும் தொகையை முதலீடு செய்ய இயலாதவர்கள், மாதம் சிறு சிறு தொகையாக நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து பெரும் லாபத்தை பெறுவதுதான். உதாரணமாக, மாதம் ரூ.5,000 என்று 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் இறுதியில் சுமார் ரூ.1 கோடி வருமானம் ஈட்டலாம்.

பொதுவாக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், லிக்விட் ஃபண்ட் திட்டங்களில் சிப் முறையில் முதலீடு செய்வது வழக்கம். இந்நிலையில், தசரா பண்டிகைக்குள் (அக்டோபர் 25) தேசிய பென்சன் திட்டத்தில் சிப் முறை முதலீடு அறிமுகப்படுத்தப்படும் என்று NSDL துணைத் தலைவர் அமித் சின்ஹா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்